சென்னை மாநக ராட்சி மேயரின் டபேதார் மாதவியின் பணியிட மாற்றத்தில் எழுந்த லிப்ஸ்டிக் சர்ச்சை அனைவரையும் வியப் புக்குள்ளாக்கியது. இவரை ஆகஸ்ட் மாதத்திலேயே மணலிக்கு பணியிட மாற்றம் செய்த நிலையில், தற்போது செப்டம்பர் மாதத்தில் அதுகுறித்து பத்திரிகையாளர் களிடம், மேயருக்கு நிகராக லிப்ஸ்டிக் போட்டதன் காரணமாகவே என்னை பணியிட மாற்றம் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டவே, ‘உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டதுக்கெல்லாமா நடவடிக்கை எடுப்பாங்க?’ என்ற கேள்வி சமூக வலைத் தளங்களில் வைரலாகி, சென்னை மேயரை பலரும் விமர்சித்தனர்.

Advertisment

ll

கொரோனா மற்றும் சென்னை வெள்ளப் பேரிடர் காலங்களில், கொட்டும் மழையிலும் அளெகரியத்தைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காகக் களமிறங்கி சிறப்பாகச் செயல்பட்டு பாராட்டப்பட்டவர் மேயர் பிரியா. அவர்மீது அவரது டபேதார் பெண் சுமத்தக்கூடிய குற்றச்சாட்டின் பின்னணி குறித்து மாநகராட்சி தரப்பில் விசாரித்தோம். "இவர் சரிவர பணிக்கு வருவதில்லை. இவரிடம் பணியை செய்யவைப்பதே பெரும் சிக்கலாகவே இருந்துவந்த கரணத்தினாலே, இந்த பணியிட மாற்றம் செய்தோம். இவரை மட்டும் இல்லை இவருக்கு முன்பாக இரண்டு நபர்களையும் மாற்றியுள்ளோம். இவர் மூன்றாவது' என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக உண்மையில் என்னதான் நடந்தது? சென்னை மாநகராட்சி மேயருக்கு டபேதாராக மாதவியை நியமிப்பதற்கு முன்பாக அவர் பணிபுரிந்த இடத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்ததா? அவரின் செயல்பாடு எப்படியென்று விசாரித்தோம். அப்படி விசாரிக்கையில், இவர் ஆரம்ப காலங்களில் மண்டலம் ஏழில் பணிபுரிந்துள்ளார். இவர் அங்கு டிக்டாக் செய்வது, மற்றும் அவர்களுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மீதும், உயரதிகாரிகளின் மீதும் மொட்ட பெட் டிஷன் போடுவது, அலுவலகங்களிலுள்ள கோப்புகளிலிருந்து சில தகவல்களைக் கசியவிடுவது எனப் பல விசயங்களை செய்து வந்துள்ளார். இதற்கு, அப்போதிருந்த மண்டல டி.ஆர்.ஓ.வான விஜயராணி இவர்மீது துறைரீதியான நடவடிக்கைகளும் எடுத்துள்ளாராம். அதேபோல, அதன்பிறகு வந்த டி.ஆர்.ஓ.வான மதியழகன் இருந்தபோதும், அலுவலக அறையிலேயே டிக்டாக் செய்ததோடு, அவர் அறையிலில்லாதபோது உள்ளே நுழைந்து கோப்புகளைப் பார்த்துள் ளார். அதை மதியழகன் கண்டறிந்த தால், இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு மெடிக்கல் சர்வீஸில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர்தான் தலைமை அலுவலகத்திற்கு மாற்றி மேயருக்கு டபேதாராக நியமனம் செய்துள்ளனர்.

Advertisment

இப்பணியில் சேர்ந்த பிறகும் பழைய நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளாராம். பணிக்கு காலதாமதமாக வருவதோடு, அடிக்கடி விடுமுறையும் எடுத்துவந்துள்ளார். இவருடைய பணியே, மேயர் வரும்போதும், போகும்போதும் முன்னின்று வரவேற்பது, வழியனுப்பி வைப்பதுதான். ஆனால் பணிக்கு தாமதமாக வருவதால் அதற்கு முன்பாகவே மேயர் வந்துவிடுகிறார். அவரை வரவேற்க டபேதார் இருப்பதில்லை அப்படி வந்தாலும் சீருடையை அணிவதில்லை. மேயர் வருவதற்கு முன்பாக ஓடிப்போய் அவசர அவசரமாக மாற்றிவருவாராம். இப்படியேயிருந்த மாதவியிடம், பல அதிகாரிகள் எடுத்துரைத்தும் கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளார். இப்படி அவர் பணிபுரிந்த 5 மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை, 33 நாட்கள் காலதாமதமாக வந்துள்ளார். மேலும், மேயர் அறையைத் தவிர்த்துவிட்டு துணை மேயர் அறைக்குச் செல்வது, மற்ற துறைக்கும் சென்று டிக்டாக் செய்வதென பழைய பாணியிலேயே இங்கும் தொடர்ந்துள்ளார். அதேபோல, மேயரைப் பார்க்க யார், யாரெல்லாம் வருகிறார்கள், என்ன நடக்கிறது என்பதை துணை மேயர் அறைக்கு கொண்டுசேர்க்கும் பணியை சிறப்பாகப் பார்த்துள்ளார். இப்படி பல சிக்கல்களால், பணிக்கு சரியாக வராத இவரை வைத்து எப்படி வேலை வாங்குவது என நினைத்து, வேறுவழியில்லாமல் மாதவியை ஆகஸ்ட் 7ஆம் தேதி மணலிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். அவரும் மணலியில் பணியில் சேர்ந்து பணிபுரிந்துவந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி கொடுத்த பணியிட மாற்றத்திற்கு, ஒரு மாதம் கழித்து மேயருக்கு நிகராக லிப்ஸ்டிக் போட்டதற் காகவே என்னை பணியிட மாற்றம் செய்தார்கள் எனச் சொல்வது சந்தேகத்தை எழுப்பியது. மேயரின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டால் முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மேயர் நற்பெயர் பெற்றுவருவதைப் பொறுக்கமுடியாத சொந்தக் கட்சியினரே, மேயரின் பெயருக்கு அவப் பெரை உண்டாக்கும் வகையில் மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க. சார்பாகக் கேள்வி யெழுப்ப முடியாது என்பதால், பா.ஜ.க. உறுப்பினரின் மூலமாகவே இவர்களின் குரலாகப் பலமுறை கேள்வியெழுப்பி மேயரை அவமதித்துள்ளனர். இதற்கெல்லாம் துணைமேயரே காரணம் எனத் தி.மு.க. உறுப்பினர்களே கிசுகிசுத்தனர். இவர்களால் மேயரின் பெயரைக் கெடுக்க எதுவும் செய்ய முடியவில்லை என்பதாலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டவரை வைத்தே இந்த பொய்ப் புகாரை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்தத் தகவல் தலைமைக்கு சென்றுள்ளதாகவும், இதுதொடர்பாகத் தலைமை விசாரித்து வருவதாகவும், இதற்கான தீர்வு விரைவில் கிடைக்குமெனவும் சொல்லப்படுகிறது. இவ்விவகாரத்தைத் தொடர்ந்து, மேலும் சில பிரச்சினைகளில் மேயரை சிக்க வைப்பதற்காகவும் திட்டம் தீட்டப்படுவதாகத் தகவல் கசிகிறது!

-சே